நாட்றம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
குடிநீர் கேட்டு வெலக்கல்நத்தம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்..;
நாட்றம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகையிட்ட பொதுமக்கள்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட வெலக்கல்நத்தம் ஊராட்சி கிட்டப்பைபயனூர், நத்திபெண்டா, லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யவில்லை என பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தனர்.
ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் முகக் கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.