ஜோலார்பேட்டை அருகே வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 4.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சோமநாயக்கன் பட்டி இரயில் நிலையத்தில் வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசியை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர்.
ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற சுமார் 4 1/2 டன் ரேஷன் அரிசியை தனிப்படையினர் கார் மற்றும் 3 பேர் பிடித்து விசாரணை.
ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன் பட்டி இரயில் நிலையத்தில் இருந்து வெளி மாநிலத்திற்கு ஓடும் ரெயிலில் கடத்துவதாக குடிமை பொருள் குற்றபுலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில் சம்பவம் இடத்திற்கு குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு ஆய்வாளர் சதிஷ் தலைமையிலான குழுவினர் விரைந்து சென்று சோதனை நடத்தியதில் சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் கடத்தலுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 3 டன் ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் ரேஷன் அரிசி கடத்தியதாக கோனேரி குப்பத்தை சார்ந்த ராஜகுமாரி என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
இதை தொடர்ந்து திம்மாம்பேட்டை அருகே வாகன சோதனை செய்யும் போது வேகமாக வந்த மாருதி காரை சோதனை செய்ததில் அதில் 1300 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது,
அதை கடத்தி வந்த திம்மாம்பேட்டை பகுதியை சேர்ந்த அருண்குமார் வயது 24, விஜயகுமார் வயது 45 ஆகிய இருவரும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் மேலும் காரையும் பறிமுதல் செய்தனர்.