வெளி மாநிலத்திற்கு கடத்தவிருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
நாட்றம்பள்ளி அருகே வெளி மாநிலத்திற்கு கடத்தவிருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து வருவாய்த்துறை நடவடிக்கை;
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த திரியாலம் பகுதியில் வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக மினி லாரியில் 4 டன் ரேஷன் அரிசி இருப்பதாக வட்ட வழங்கல் அதிகாரி நடராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வருவாய்த்துறையினர் அவ்வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்தனர். அதிகாரிகள் இருப்பதை கவனித்த மினி லாரி ஓட்டுநர், லாரியை ஏரிக்கரை மீது நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்,
மினி லாரியை சோதனை செய்தபோது, அதில் 4 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்ததையடுத்து வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்..