திருச்சியில் கொரோனா தடுப்பு மருத்துவ ஆலோசனை முகாம் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்

திருச்சியில் தவ்ஹீத் ஜமாஆத் சார்பில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனை மருத்துவ முகாமை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்.

Update: 2021-05-31 12:30 GMT

திருச்சி தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததானம் வழங்கியவர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு சான்றிதழ் வழங்கினார்.

திருச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடந்த மருத்துவ ஆலோசனை முகாமை தொடங்கி வைதத அமைச்சர் கே.என்.நேருதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மூலமாக கொரானோ தொற்று நோய் பாதித்து இறந்தவர்களை உடல்களை அவர்களின் மத சம்பிரதாயத்தின்படி அடக்கம் செய்து வரும் செயலை பாராட்டினார். 

முகாமில்  ரத்ததானம் செய்த 153 பேரை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். மேலும் அனைத்து சமுதாய மக்கள் பயன்படுத்தும் வகையில் ஆம்புலன்சை சேவையை துவங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர் மண்டிசேகர், போட்டோ கமால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட தலைவர் குலாம் தஸ்தகீர், மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், பொருளாளர் முகமது உசேன், மாவட்ட பொருளாளர் முகமது ரபிக், மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News