திருச்சி கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் காதலன் உள்ளிட்ட இருவர் கைது

திருச்சியில் கல்லூரி மாணவி தற்கொலை செய்த வழக்கில் காதலன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-06 05:15 GMT

திருச்சி தற்கொலை  செய்து கொண்ட கல்லூரி மாணவி சங்கீதா

திருச்சி தென்னூர் அண்டகொண்டான் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவரின் மகள் சங்கீதா (வயது20). கல்லூரி மாணவி. இவருக்கும் பாலக்கரை எடத்தெருவைச் சேர்ந்த சரவணகுமார் (வயது19) என்பவருக்கும் காதல் இருந்து வந்தது. இதன் காரணமாக சங்கீதா 2 முறை கர்ப்பமாகி உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் சரவணகுமார், சங்கீதாவை திருமணம் செய்ய மறுக்கவே, கோட்டை அனைத்து மகளிர் போலீஸ்  நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மகளிர் போலீசார் விசாரணை நடத்திய போது சரவணகுமார், சங்கீதாவை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் போலீஸ் நிலையத்தை  விட்டு வெளியே வந்த பிறகு சங்கீதாவை ஜாதி பெயரை சொல்லி திட்டி விட்டு சென்றாராம்.

இதனால் மனமுடைந்த சங்கீதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.   சங்கீதாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி நேற்று முன் தினம் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்களும், சமூக ஆர்வலர்களும் போராட்டம் நடத்தினர்.

இதனை தொடர்ந்து தில்லைநகர் போலீசார் சங்கீதாவின் காதலன் சரவணகுமார், அவரின் தந்தை மூர்த்தி (வயது 50) உட்பட 5 பேர் மீது சங்கீதாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்த நிலையில் மூர்த்தி மற்றும் சரவணக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News