மண்ணச்சநல்லூர் தொகுதி மக்களுக்கு தனலெட்சுமி கல்லூரியில் சிறப்பு சிகிச்சை மய்யம் :சீனிவாசன் அறிவிப்பு

மண்ணச்சநல்லூர் தொகுதி மக்களுக்கென தனலெட்சுமி மருத்துவ கல்லூரியில் சிறப்பு சிகிச்சை மய்யம் அமைக்கப்பட்டுள்ளது என கல்லூரி நிர்வாகக் குழு தலைவர் சீனிவாசன் தெரிவித்தார்.

Update: 2021-06-01 07:00 GMT
சமயபுரம் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்மன் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிததார்.

சமயபுரம் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவ மனை வளாகத்தில் சேர்மன் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.

பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில் கடந்த 11 ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறோம்.அது போல மண்ணச்சநல்லூர் தொகுதியில் உள்ள சமயபுரம் தனலெட்சுமி மருத்துவ கல்லூரி மருத்துவமனை மூலம் மண்ணச்சநல்லூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் தரமான இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவித்தோம், அதுபோல தற்போது சிகிச்சை அளித்து வருகிறோம்.

தற்போது சமயபுரம் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக 350 படுக்கைவசதியுடன் சிகிச்சை மய்யம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 60 ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதி தீவிர தொற்றுக்கு 15 படுக்கை வசதியும், 135 படுக்கைகள், லேசான மற்றும் மிதமான தொற்றுக்கு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. மீதமுள்ள படுக்கைகள் மூலம் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

105 நோயாளிகள் கோவிட் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் தற்போது 40பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கான காப்பீட்டு திட்டம் மூலமும், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் மருத்துவமனையில் இதுவரை மண்ணச்சநல்லூர் தொகுதியை சேர்ந்தவர்கள் 150 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.சட்டசபை தேர்தலின் போது கூறியபடி அனைவருக்கு இலவச மருத்துவம் வழங்கப்படும், பொதுமக்கள் மருத்துவ தேவைக்கு மருத்துவமனை மேலாளர் விஜய்பாபுவின் 7094466511 என்கிற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டால், நேரடியாக மருத்துவக் கல்லூரி வாகனம் அனுப்பி மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிப்போம்,

மிக விரையில் மண்ணச்சநல்லூர் தொகுதி மக்கள் அனைவரும் எளிதில் வந்து செல்லக் கூடிய இடங்களில் மருத்துவ சிகிச்சை மய்யங்கள் அமைக்கப்படும், சாலைவசதி, போக்குவரத்து வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் விரைவில் அமைத்து தருவோம் இவ்வாறு அவர் தெரிவித்தார். கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் ராஜேஸ், சங்கர், டீன் ராஜகோபல் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News