மண்ணச்சநல்லூரில் திமுக தலைவர் பிறந்தநாள் விழா: நிவாரண உதவி எம்எல்ஏக்கள் வழங்கினர்
மண்ணச்சநல்லூரில் நடந்த திமுக தலைவர் கருணாநிதியின் 98வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட து. இதில் வடக்கு மாவட்ட செயலாளரும், முசிறி எம்எல்ஏவுமான காடுவெட்டி தியாகராஜன், மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டு கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து 200 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.;
மண்ணச்சநல்லூரில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ கதிரவன் தலைமை வகித்தார். மாவட்டசெயலாளரும் எம்எல்ஏவுமான காடு வெட்டி தியாகராஜன் தியாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். 200 பேருக்கு அரிசி, காய்கறி, உள்ளிட்ட மளிகை தொகுப்பை வழங்கினர்
கொடிமரத்தடியில் உள்ள திமுக கொடி கம்பத்தில் கொடியேற்றி, அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். பின்னர் மண்ணச்சநல்லூர் அக்ரஹாரத்தில் உள்ள கொடி மரத்திலும் திமுக கொடியேற்றி இனிப்பு வழங்கினர். மூத்த திமுக உறுப்பினர் கௌதமனுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய சேர்மன் ஸ்ரீதர், துணை சேர்மன் கே.பி.ஏ செந்தில், மண்ணச்சநல்லூர் நகர செயலாளர் சிவசண்முக குமார், ஒன்றிய திமுக செயலாளர் செந்தில், ஊராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன்,
முன்னாள் நகர செயலாளர் ஜெயபால், துணைச் செயலாளர் கண்ணன், பொருளாளர் கார்திக், சீனிவாசன், தர்மலிங்கம், மாடு கார்த்தி, பாபா, சீனிவாச பெருமாள், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆனந்தன், ஊராட்சி தலைவர் சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.