விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு ரூ.3 லட்சம் மதிப்பு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கல்
விளாத்திகுளம் அரசு மருத்துவனைக்கு திருச்சி தென்போஸ்கோ மேம்பாடு நிதிநிறுவனம் சார்பில் 5ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் வழங்கப்பட்டது.;
விளாத்திகுளம் எம்.எல்.ஏ.மார்க்கண்டேயன் முன்னிலையில் வழங்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை மூலமாக விளாத்திகுளம் நகர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் இந்த மருத்துவமனையில் 56 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இந்த மருத்துவமனையில் 8 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இருக்கும் நிலையில் தென்போஸ்கோ மேம்பாடு நிதிநிறுவனம் சார்பில் ரூ.3லட்சத்து 25ஆயிரம் மதிப்புள்ள 5 லிட்டர் கொள்ளவு கொண்ட 5ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் வழங்க முன்வந்தது.
இதனையடுத்து ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. விளாத்திகுளம் எம்.எல்.ஏ.மார்க்கண்டேயன் முன்னிலையில் அந்த அமைப்பினர் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை வழங்கினர்.