மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு

விளாத்திகுளத்தில் மனைவியை கொன்ற கணவனுக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Update: 2021-10-05 15:30 GMT

ஜீலிபாரத் 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலையம் தெருவை சேர்ந்த அருணாதேவிக்கும் திருநெல்வேலி சிவகிரியை சேர்ந்த ஜீலிபாரத் (42) என்பவருக்கும், 2012 ஆண்டில் திருமணமானது. கணவன் - மனைவிக்கு இடையே ஏற்றபட்ட குடும்ப பிரச்சினையால், அருணாதேவி,  விளாத்திகுளத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கடந்த 07.11.2015 அன்று ஜூலிபாரத் தனது மனைவியை பார்க்க விளாத்திகுளத்திற்கு வந்தபோது, அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதில், ஜூலிபாரத் தனது மனைவி அருணாதேவியை கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார். விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜூலிபாரத்தை கைது செய்தனர். இவ்வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டியராஜன் , இன்று ஜூலிபாரத்திற்கு, ஆயுள் தண்டனையும், ரூ.1,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Tags:    

Similar News