தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்த தடுப்பணையை சீரமைக்காமல் காலம் தாழ்த்துவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வடக்கு கல்மேட்டில் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தடுப்பு அணை சிதிலமடைந்து காணப்படுகிறது. பல முறை மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் கால தாமதம் செய்து வருவதாகவும், இதனால் 2500 ஏக்கரில் செய்யப்பட்ட விவசாயம் தற்பொழுது 500 ஏக்கராக சுருங்கியுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.விவசாயம் மட்டுமின்றி மழைநீர் கடலில் கலக்கும் அபாயம் உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது மட்டுமின்றி, பலத்த மழை பெய்தால் கல்லாற்று அணை இருந்த தடம் கூட தெரியமால் போய் விடும் என்று வேதனையுடன் விவசாயிகள் கூறுகின்றனர்.