தேர்தல் தோல்வியால் அமமுக பெண் வேட்பாளர் தற்கொலை முயற்சி: தூத்துக்குடியில் பரபரப்பு

தேர்தல் தோல்வியால் அமமுக பெண் வேட்பாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-02-23 04:33 GMT

விளாத்திகுளத்தில் தற்கொலைக்கு முயன்ற அமமுக வேட்பாளர் ராமஜெயம்

சாத்தூர் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் சுகுணா(52). இவரது கணவர் நாகராஜ்(58). இவர் சாத்தூர் நகராட்சியில் மேஸ்திரியாக பணிபுரிந்து வந்தார். சுகுணா சாத்தூர் நகராட்சி 19வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். இவரது வெற்றிக்கு கணவர் நாகராஜ் தீவிர வேலை பார்த்தார். இந்நிலையில் நேற்று ஓட்டுகள் எண்ணும்பணி ஆரம்பமானது. சாத்தூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் 18 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வென்றனர். அதிமுக ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. ஆனால், 19வது வார்டில் போட்டியிட்ட சுகுணா தோல்வியை தழுவினார். இந்த வார்டில் மொத்தம் 930 வாக்குகள் பதிவானது. இதில் சுகுணா 215 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சுபிதாவிடம் தோல்வியடைந்தார். இதனால் சுகுணாவும், அவரது கணவர் நாகராஜூம் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் மனமுடைந்த நாகராஜோ, திடீரென்று விஷத்தை எடுத்து குடித்துவிட்டார்.. இதை பார்த்து பதறிப்போன சுகுனாவும் குடும்பத்தினரும் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர் மற்றும் எட்டையபுரம் உள்ளிட்ட பேரூராட்சிகளுக்கு எட்டையபுரத்தில் உள்ள, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் விளாத்திகுளம் பேரூராட்சி 8வது வார்டில், அமமுக சார்பில் போட்டியிட்ட ராமஜெயம் என்ற பெண் வேட்பாளர் 5 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த ராமஜெயம், தேர்தலில் படுதோல்வியடைந்த அதிர்ச்சியில் எறும்பு பொடியை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதை குடும்பத்தில் இருந்தவர்கள் பார்த்துவிட்டதால், உடனடியாக எறும்புப்பொடி சாப்பிட்ட ராமஜெயத்தை மீட்டு சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இப்போது அவருக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. தேர்தலில் தோல்வியடைந்த காரணத்திற்காக வேட்பாளர்கள் தற்கொலை செய்து கொள்வதும், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


Tags:    

Similar News