திருச்செந்தூர் அருகே காடுகளில் கள்ளச்சாரயம் தயாரிப்பு-ஊறல் அழிப்பு-இருவருக்கு போலீஸ் வலை
திருச்செந்தூர்அருகே பனங்காடுகளில் பட்டைசாராயம் அழிப்பு-தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே பனங்காட்டில் கள்ளச்சாராயம் வடிப்பு கண்டுப்பிடிக்கப்பட்டு, 20 லிட்டர் ஊரல் அழிக்கப்பட்டது. மேலும் காய்ச்ச பயன்படுத்திய கேஸ் சிலிண்டர், அடுப்பு மற்றும் பானை உள்ளிட்டவற்றை போலிசார் பறிமுதல் செய்தனர். சம்பவ இடத்தை எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனங்காட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் ஜூடி, உதவி ஆய்வாளர் தாமஸ், ஸ்ரீவைகுண்டம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஜெகநாதன், தலைமைக் காவலர் லட்சுமணன், தனிப்பிரிவு காவலர் சந்தோஷ் செல்வம், ஆகியோர் ரோந்து சென்றபோது இருவர் அப்பகுதியில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர், போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தப்பியோடியவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். மேலும் குரும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திலிருந்த 20 லிட்டர் ஊரலை அழித்து, கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய கேஸ் அடுப்பு, கேஸ் சிலிண்டர் மற்றும் 2 பானைகளை உள்ளிட்டவற்றை போலிசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.