குலசேகரபட்டினம் முத்தாரம்மன் திருக்கோயி லில் ஆடி கொடைகால் நடும் விழா
மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் சமேத ஞானமூர்த்தீஸ்வரர் கோயிலில் தசரா திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.
உலக புகழ்பெற்ற தசரா திருவிழாவானது மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் சமேத ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் திருக்கோயிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த திருக்கோயிலில் நவராத்திரி 10 நாட்களும் தசரா திருவிழா நடைபெறும். மேலும் ஆடி கொடைவிழா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்தாண்டு ஆடி கொடை விழா வருகிற 3ஆம் தேதி நடை பெறுவதை முன்னிட்டு இன்று கொடைகால் நடப்பட்டது.
இதனையொட்டி இன்று காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. பின்னர் மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்யப்பட்ட காலுக்கு பச்சை பட்டு சாத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதனையடுத்து கோவில் வளாகத்தில் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து நவதானியம் மற்றும் பால் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை செய்யபட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கொரொனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த நிகழ்ச்சி பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றது. கோவில் பணியாளர்கள் மட்டும் கலந்துகொண்டனர். வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஆகஸ்ட் 3ம் தேதி காலை 8 மணிக்கு அபிஷேக அலங்கார தீபாராதனையும், 12 மணிக்கு கும்பம் எழுந்தருளி கோயில் உள் பிரகாரம் சுற்றி வலம் வருதல், இதனையடுத்து இரவு கும்பம் மற்றும் தீச்சட்டி எழுந்தருளி, உள் பிரகாரம் சுற்றி வலம் வருதல் நடைபெறும் . கொரொனா ஊரடங்கு என்பதால் 3 ஆம் தேதி நிகழ்ச்சிகளுக்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஆன்லைன் மூலம் பக்தர்கள் திருவிழாவை கண்டு தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.