திருமணம் முடிந்த கையோடு புதுப்பெண்ணுடன் மாட்டு வண்டியில் வலம் வந்த இளைஞர்!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் திருமணம் முடிந்த கையோடு புதுப்பெண்ணை மாட்டுவண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்து குத்தாட்டம் போட்ட விவசாய மணமகனால் கிராம மக்கள் உற்சாகமடைந்தனர்.

Update: 2023-08-22 04:01 GMT

மாட்டு வண்டியில் பயணித்த புதுமண ஜோடி.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள காயாமொழி கிராமத்தை சேர்ந்தர் மோகன்ராஜ். இவர் டிப்ளமோ பட்டயப்படிப்பு முடித்துள்ளார். மோகன்ராஜ் பூர்விக விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலூம் விவசாயம் மீது கொண்ட ஆர்வத்தாலும் பட்டயப்படிப்பு முடித்துவிட்டு விவசாயம் செய்துவருகிறார். இந்தநிலையில் இவருக்கும் செந்தாமரைவிளை பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கலையரசிக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நேற்று திருமணம் நடைபெற்றது.

இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடவும், பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டி மூலம் நிலத்தை உழுதிட வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் மோகன்ராஜ் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் சென்று திருமணம் செய்து கொண்டார். அதனைத்தொடர்ந்து திருமணம் முடிந்த கையோடு மணமகளை அவரது வீட்டிலிருந்து தன்னுடைய வீட்டிற்கு மாட்டுவண்டியில் ஊர்வலமாக அழைத்துவந்தார். செந்தாமரைவிளை பகுதிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் மாட்டு வண்டியில் புதுமண ஜோடி ஊர்வலமாக சென்றதை அந்தப் பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர்.

மேலும், செண்டை மேளத்துடன், உற்சாகமாம ஆட்டம் பாட்டத்துடன் காயாமொழியிலுள்ள மணமகன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது வழிநெடுகிலும் நின்ற பொதுமக்கள் மணமக்களுக்கு ஆரவாரத்துடன் உற்சாகமாக மலர் தூவி வரவேற்றனர். மணமக்கள் மாட்டுவண்டியில் வந்து இறங்கியதும் மணமகன் வீட்டார் மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது மணமகன் மோகன்ராஜ் உற்சாகமாக குத்தாட்டம் போட்டு அனைவரையும் உற்சாகமூட்டி பரவசப்டுத்தினார்.

மேலும் மக்கள் விவசாயத்திற்கு இயந்திரங்களை பயன்படுத்துவதால் பாரம்பரிய விவசாயங்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுவதாகவும், விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்ட கால்நடைகளும் அழிந்துவருவதாகவும் கூறிய மணமகன் மோகன்ராஜ், காளை மாடுகளை விவசாய உழவுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும், இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடவேண்டும் என்ற விளிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் திருமணம் முடிந்த கையோடு மாட்டுவண்டியில் ஊர்வலம் சென்றதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News