கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருச்செந்துார் நாழிக்கிணற்றில் நீராட தடை

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாழிக்கிணற்றில் புனித நீராட மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-25 01:56 GMT

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக திருச்செந்துார் கோயிலில் தினசரி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கும், புனித நீராடவும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தினசரி கோயிலுக்கு வரும் பக்தர் கள் கூட்டம் அதிகரித்து வருகிறது என்பதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதியும், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நேற்று முதல் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராட அனுமதி அளிக்கப் படவில்லை. அதனால் நேற்று கோயிலுக்கு வந்த பக்தர்கள் கடலில் மட்டும் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News