விமான நிலைய விரிவாக்க பணிகள் நிர்வாக இயக்குனர் ஆய்வு

Update: 2021-01-09 11:30 GMT

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகளை பொறியியல் பிரிவு நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் நடைபெற்ற விரிவாக்க பணிகளை டெல்லியில் உள்ள இந்திய விமான நிலைய ஆணைய பொறியியல் பிரிவு நிர்வாக இயக்குனர் சஞ்சீவ் ஆய்வு செய்தார். விமான ஓடுதளம், விமான நிறுத்தம், பயணிகள் முனையம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர் விமான நிலைய வளாகத்தில் ரூ 28 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலகத்தை திறந்து வைத்து அந்தப் பகுதியில் மரக்கன்றுகளை நட்டார்.நிகழ்ச்சியில் விமான நிலைய ஆணைய பொது மேலாளர்கள் பிரசாத், இணை பொது மேலாளர்கள் இராதாகிருஷ்ணன், கிருஷ்ணன்,தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன், நிலைய மேலாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: