ஶ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் திருவிழா: மதுக்கடைகளை மூட வலியுறுத்தல்

ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள புனித சந்தியாகப்பர் திருவிழாவை முன்னிட்டு மதுக்கடைகளை மூட வேண்டும் என பாஜகவினர் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.;

Update: 2023-07-14 09:26 GMT

ஶ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமாரிடம் பாஜகவினர் மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா ஜூலை 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜூலை 25 ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற பின் திருவிழா நிறைவுபெறும்.

இந்த புனித சந்தியாகப்பர் ஆலயம் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக தூத்துக்குடி மாவட்ட அளவில் அனைத்து சமுதாய மக்களும், அனைத்து மதத்தினரும் வந்து வணங்ககூடிய ஒரு புனித திருத்தலம் ஆகும். ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் மிக முக்கிய திருவிழாவாக்கிய புனித சந்தியாகப்பர் திருவிழா அதிகமான பக்தர்கள் வந்து வணங்கி செல்வார்கள்.

இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமாரிடம் இன்றைய தினம் பா.ஜ.க.வினர் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களான கடல்புறத்து மீனவர்களும் அதிகமாக சந்தியாகப்பரை தரிசிக்க வருவார்கள். 10 நாட்கள் தங்கியிருந்து சந்தியாகப்பரை தரிசனம் செய்து தாமிரபரணி நதிக்கரையில் நீராடி தங்குவது உண்டு.

மேலும், அந்த நாட்களில் பொழுதுபோக்குக்கு முக்கிய அம்சமாக கருதப்படும் ராட்டினம் மற்றும் கண்காட்சிகள் மற்றும் பக்தர்களும் ஊர் பொதுமக்களும் பொழுதுபோக்கு அம்சத்திற்கு தேவையான ராட்டினம் குரங்கனிக்கு அனுமதி அளிக்கும் பொழுது ஸ்ரீவைகுண்டம் சந்தியாகப்பர் ஆலய திருவிழாவிற்கு அனுமதி ஏன் மறுக்கப்படுகிறது.

ராட்டினம் அமைக்க அனுமதி அளிக்குமாறும் கோவில் வளாகம் முழுவதும் சி.சி.டி.வி கேமரா அமைத்தும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க கோவில் திருவிழாவின் முக்கிய நாளான ஜூலை 23 ஆம் தேதி முதல் 25 வரை மூன்று நாட்கள் அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரியும் ஊர் பொதுமக்கள் சார்பாகவும், பக்தர்கள் சார்பாகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் சிவக்குமார் தெரிவித்துள்ளதாக பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News