சாத்தான்குளம் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் பாஜகவில் இணைந்தனர்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தனியார் திருமண மண்டபத்தில் பாஜக செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நடைபெற்றது.;
சாத்தான்குளத்தில் பாரதிய ஜனதா கட்சி செயற்குழுகூட்டத்தில் மாற்றுக் கட்சியினரை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக திரண்டு வந்து பாஜக கட்சியில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை உள்ளார். அவர் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதனைத் தொடர்ந்து கட்சியை வளர்ததெடுக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இதனால் பல்வேறு இடங்களில் பாஜகவிற்கு ஆதரவு பெருகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் மாற்றுக்கட்சி இருந்து தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தனியார் திருமண மண்டபத்தில் பாஜக செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் செயற்குழு கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போது திடீரென திமுக, அதிமுக,நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினரை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தங்களது கட்சியிலிருந்து விலகி சாத்தான்குளம் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.