ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி திருக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

Update: 2023-04-12 06:12 GMT

ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி திருக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாடு முழுவதும் பெருமாளுக்கு 108 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. இதில், தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பல கோயில்களும் அடங்கும். மேலும், தாமிரபரணி ஆற்றங்கரையில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் 9 பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. அவை நவதிருப்பதி கோயில்கள் என அழைக்கப்படுகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதிகள் முதலாவது திருப்பதியான ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி திருக்கோவிலில் சித்திரை பிரம்மோஸ்த திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அதன்படி இந்த வருடத்திற்கான சித்திரை பிரம்மோற்சவவிழா இன்று கொடியேற்றதுடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், நித்தியல் கோஷ்டி நடைபெற்றது. காலையில் கொடிப்பட்டம் வீதிஉலா வந்தது. பின்னா் பகல் 10.45 மணிக்கு மேல் உற்சவா் கள்ளா்பிரான் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் கொடிமரம் அருகில் ஏழுந்தருளினாா்.

கருடக்கொடிக்கு பூஜைகள் நடைபெற்று தீபாராதனைக்குப் பின் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் இரவில் பல்வேறு வாகனங்களில் வீதிபுறப்பாடு நடக்கிறது.சிறப்பாக வருகின்ற 15 ஆம் தேதி 5 ஆம் திருநாளை முன்னிட்டு இரவில் 4 கருடசேவை, நம்மாழ்வாா் அன்ன வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகின்றது. கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News