ஏரல் அருகே கொலை செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் பாலு குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பாலு கொலை செய்யப்பட்டு வீர மரணமடைந்தார். அவரது சொந்த ஊரான முடிவைத்தானேந்தலில் உள்ள அவரது வீட்டிற்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று நேரில் சென்று பாலு புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாவட்ட எஸ்பி, ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.