வீரன் சுந்தரலிங்கம் பிறந்தநாள் விழா -கலெக்டர் மரியாதை

Update: 2021-04-16 08:56 GMT

கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கம் 251வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் கவர்னகிரியில் சுதந்திர போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் அன்னாரது 251வது பிறந்த நாள் விழா இன்று (16 ம் தேதி) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் (பொ) / மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், சுந்தரலிங்கனார் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் மணிகண்டன், ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார் மற்றும் அலுவலர்கள், சுதந்திர போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கம் வாரிசுதாரர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News