தூத்துக்குடி அருகேயுள்ள அல்லிகுளத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டம், பேரூரணி, தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி என்பவரது மகன் மகேஷ் (20). இவர், மேலக்கூட்டுடன்காடு அல்லிகுளம் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விமலா விசாரணை நடத்தி, போக்ஸோ சட்டத்தில் மகேஷை கைது செய்தார்.