மாணவர்களை பணியாளர்களாக நடத்துவதாக புகார்- நீதிமன்ற பணிக்குழு ஆய்வு

Update: 2021-02-06 12:00 GMT

பசுவந்தனை அருகே விடுதி மாணவர்களை கொத்தடிமை பணியாளர்களாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் நீதிமன்ற பணிக்குழுவினர் அங்கு ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா பசுவந்தனை அருகே சில்லாங்குளத்தில் முத்துக்கருப்பன் நினைவு கல்வி அறக்கட்டளை கல்வி நிலையம் இயக்கி வருகிறது. இக்கல்வி நிலையத்தில் ஆதரவற்ற மாணவ மாணவியர்கள் சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், ஆதரவற்ற நிலையில் விடுதிகளில் பயின்று வரும் பள்ளி மாணவர்களை கல்வி நிலையங்களில் நடைபெற்று வரும் கட்டிடப் பணிகளுக்கு கொத்தடிமை பணியாளர்கள் போல் பயன்படுத்துவதாக வந்த புகாரின் பேரில் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் வழக்கறிஞர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News