கோவில் நிலங்களை மீட்க கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுக்கை
கோவில்பட்டி அருகே கோவில் நிலங்களை மீட்க வலியுறுத்தி கிராம மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கட்டரங்குளத்தில் சுமார் 650 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது. பழங்கால மன்னர்கள், ஜமீன்தார்கள் மற்றும் பொது மக்கள் பலர் இந்த கோவில் பூஜை மற்றும் வளர்ச்சிக்காக நிலங்களை தானமாக வழங்கியுள்ளனர்.
கடந்த 1960ம் ஆண்டு வரை இந்த சொத்துக்கள் அனைத்து கோவில் பெயரில் தான் இருந்துள்ளது. அதன் ஒரு சிலர் அறக்கட்டளை என்ற பெயரில் கோவில் சொத்துக்களை தங்களது பெயரில் பட்டா மாற்றிக்கொண்டதாகவும், கோவிலுக்கு சொந்தமான குளம் மற்றும் 43 ஏக்கர் நிலம் காணவில்லை என்றும், மீதமுள்ள நிலங்கள் தனியார் காற்றாலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முறைகேடாக ஆவணங்கள் தயாரித்து இந்த நிலங்களை விற்பனை செய்துள்ளதாகவும், தற்போது கோவில் சிதலமடைந்து, பூஜை நடைபெறமால் இருப்பதால், கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்டுஎடுக்க வேண்டும்,. முறைகேடில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்கிராம மக்கள் மற்றும் 5வது தூண் அமைப்பினர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்களது கோரிக்கை மனுவினையும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.