கோவில்பட்டியில் மாணவி கடத்தல்: இளைஞர்கள் நால்வர் அதிரடி கைது

கோவில்பட்டியில் பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.;

Update: 2021-09-20 18:22 GMT

பைல் படம்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (23). இவருக்கும் பிளஸ்-2 படித்து வரும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் 21-ம் தேதி அந்த மாணவியை கார்த்திக் கடத்திச் சென்றார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வாலிபரிடம் இருந்து அந்த மாணவியை மீட்டனர். அவரை கடத்திய கார்த்திக், அவருக்கு உடந்தையாக இருந்ததாக மகாராஜா (23), செண்பகராஜ் (27), மாரிமுத்து (19) ஆகிய 4 பேரை போலீசார் பிடித்தனர்.

இதில் பள்ளி மாணவியை கடத்திய கார்த்திக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலுக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News