கோவில்பட்டியில் கல்லூரி மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம்

கோவில்பட்டி நகரில் கல்லூரி மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றன.

Update: 2021-08-31 09:12 GMT

பசுவந்தனை சாலையில் உள்ள மகாலட்சுமி மஹாலில் நடைபெற்ற முகாமினை பார்வையிட்ட நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி. 

தமிழகத்தில் நாளை முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கோவில்பட்டி நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பசுவந்தனை சாலையில் உள்ள மகாலட்சுமி மஹால், புது ரோட்டில் உள்ள நகராட்சி பள்ளி, பங்களா தெரு, பஸ் நிறுத்தம், புதுக்கிராமம் ஆவுடையம்மாள் திருமண மண்டபம், பார்க் சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம், கோவில்பட்டி அரசு மருத்துவமனை, ஸ்ரீராம் நகர் நகர் நல மையம் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த முகாம்களில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதில் 1258 பேர் பங்கேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர். பசுவந்தனை சாலையில் உள்ள மகாலட்சுமி மஹாலில் நடைபெற்ற முகாமினை நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மருத்துவர்கள் மனோஜ் தமிழ்ச்செல்வி, நகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News