கோவில்பட்டி அருகே கார் கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள் இல்ல விழாவிற்கு சென்ற போது கோவில்பட்டி அருகே கார் விபத்துக்குள்ளாகி பெண் ஒருவர் உயிரிழப்பு.
கோவில்பட்டி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த ஒரு பெண் சம்பவ இடத்திலே பலி.
காஞ்சிபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக திலகா, சினேகா, காவியா, லோகேஷ், பன்னீர்செல்வம், ஓட்டுனர் மிலன் சதீஷ் ஆகியோர் ஹூண்டாய் காரில் சென்றனர். அப்போது கார் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை பகுதிக்கு வந்து கொண்டிருக்கும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் திலகா என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றவர்கள் 5 பேரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து எட்டயபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.