மனவளக்கலை மன்றம் ஆண்டு விழா
திருவாரூர் அருகே மனவளக்கலை மன்ற 5-ஆம் ஆண்டு தொடக்க விழா
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மனவளக்கலை மன்றத்தின் 5-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு மன்ற நிர்வாகி ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். துணை நிர்வாகி அருள்செல்வன், பொறுப்பாசிரியர் ராஜேந்திரன், பேராசிரியர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மனவளக்கலை மன்றத்தின் கும்பகோணம் மண்டல துணைத்தலைவர் காசிநாதன் மனவளக்கலை மன்ற விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இவ் விழாவில் கும்பகோணம் மண்டல பொருளாளர் செல்வம், செயல் அலுவலர் முருகன், துணை பேராசிரியர் பக்கிரிசாமி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். பேராசிரியை ரமா இறைவணக்கம் பாடினார். முன்னதாக மன்ற பொறுப்பாளர் கருப்பையன் வரவேற்றார். முடிவில் மன்ற செயலாளர் அமலதாஸ் நன்றி கூறினார்.