நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவதை கண்டித்து சாலை மறியல் போராட்டம்

திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவதை கண்டித்து சாலை மறியல் நடந்தது.

Update: 2022-03-10 12:34 GMT

திருத்துறைப்பூண்டியில்  சாலை மறியல் போராட்டம் நடந்தது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் முழுவதும் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல்லை உடனடியாக எடுத்து செல்ல வேண்டும்,கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்,கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து கொள்முதல் நிலையங்களையும் உடன் சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மறியல் போராட்டம் நடத்தினர்.  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன் தலைமை தாங்கினார்.இதேபோல் நெடும்பலம், பிச்சன்கோட்டகம், மேலமருதூர், கட்டிமேடு, மணலி , ஆலத்தம்பாடி , கச்சனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சாலை மறியல் நடந்தது.

Tags:    

Similar News