திருத்துறைப்பூண்டி அருகே பறவைகளை வேட்டையாடிய இளைஞர் கைது
திருத்துறைப்பூண்டி அருகே சட்ட விரோதமாக பறவைகளை வேட்டையாடிய இளைஞர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.;
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பறவைகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் இன்று எழிலூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இளநகர் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (25) என்ற இளைஞர் வயல் பகுதியில் இரண்டு மடையான் பறவைகளை வேட்டையாடிய போது வனத் துறையினர் அவரை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்த இரண்டு பறவைகள் மற்றும் வேட்டைக்குப் பயன்படுத்திய வலை உள்ளிட்ட பொருள்களை முத்துப்பேட்டை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.