7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோ வழக்கில் கைது
திருத்துறைப்பூண்டி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மேட்டுப்பாளையம் நாலாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது44.) இவர் அருகே உள்ள கிராமத்தில் அதிகாலை ஒரு வீட்டின் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் தூங்கி கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதில் சிறுமி அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக சென்று பார்த்தபோது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட செந்தில் என்பவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் . இதன் தொடர்ச்சியாக திருத்துறைப்பூண்டி போலீசார் செந்தில் மீது போக்சோ ஆக்ட் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.