அடிப்படை வசதி: திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டியில் அடிப்படை வசதிகள் கோரி 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.;
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தண்டலச்சேரியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.கடந்த 2018 ஆம் வீசிய கஜா புயலால் இக்கல்லூரி கட்டிடத்தின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தது. இந்நிலையில் சேதமடைந்த கண்ணாடிகளை சீரமைத்து தர வேண்டும். கல்லூரியின் உள்புறத்தில் உள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும்.
கல்லூரியின் பின்புறம் அமைந்துள்ள மரங்களை அகற்றி சுத்தம் செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தலைமையில் கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.