அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் ஸ்ரீவாஞ்சியம் கோயிலில் வழிபாடு.

தமிழக அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் ஸ்ரீவாஞ்சியம் கோயிலில் செவ்வாய்க்கிழமைத் தோஷ நிவர்த்தி வழிபாடு செய்தார்

Update: 2021-04-21 09:30 GMT

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் ஸ்ரீவாஞ்சியம் கிராமத்தில், எமதர்மராஜா, சித்திரகுப்தர் தனி சன்னதியில் எழுந்தருளிப் பக்தர்களின் எமபயம் மற்றும் பைரவ உபாதையை போக்கிடும் ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவாஞ்சிநாதசுவாமிக் கோயில் உள்ளது.

இக்கோயிலில் பிலவ ஆண்டு சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை, வளர்பிறை அசோகாஷ்டமி தினத்தில், தமிழக கால்நடை நலத்துறை அமைச்சர் உடுமலை கே.இராதாகிருஷ்ணன் வருகைத் தந்து, எமதர்மராஜா, சித்திரகுப்தர் சன்னதியில் சிறப்புப் பூஜைகள் செய்து, ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவாஞ்சிநாதசுவாமிக்கும் அபிஷேக, ஆராதனைகள் செய்து தோஷ நிவர்த்திக்காக வழிபாடு நடத்தினார்.

அமைச்சருக்குக் கோயில் சிவாச்சாரியார்கள் பரிவட்டம் கட்டி வரவேற்பளித்தனர். ஸ்ரீவாஞ்சியம் வருகைதந்த அமைச்சருக்குக் கீழ்குடி ஊராட்சி மன்றத் தலைவர் மணிமாறன், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒன்றியச் செயலாளர் கே.கே.சாகேஸ்வரன், நன்னிலம் நகரத் தகவல் தொழில் நுட்பப் பிரிவுச் செயலாளர் செல்.சரவணன் மற்றும் கட்சியினர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

Tags:    

Similar News