நன்னிலம் அருகே ஸ்ரீசெல்லியம்மன் கோவில் தேர் திருவிழா: பக்தர்கள் தரிசனம்

கீரனூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீசெல்லியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் தலையில் சுமந்து செல்லும் எல்லை தேர்திருவிழா நடைபெற்றது.;

Update: 2022-04-06 12:42 GMT

கீரனூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீசெல்லியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் தலையில் சுமந்து செல்லும் எல்லை தேர்திருவிழா நடைபெற்றது.

பக்தர்களே தலையில் தூக்கிசெல்லும் எல்லை தேர் திருவிழா. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தரிசனம்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கீரனூர் கிராமத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீசெல்லியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் தலையில் சுமந்து செல்லும் புகழ்மிக்க எல்லை தேர்திருவிழா நடைபெற்றது. இவ்வாலயத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் எல்லை தேர் பவனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருக்கோவிலில் பங்குனி உற்சவம் திருவிழா கடந்த 28ஆம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது.

இந்த தேர் பவனியில் மற்ற தேர்கள் போன்று வடம் பிடித்து இழுக்காமல் பக்தர்கள் தங்கள் தலையில் வைத்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வயல் வழியே சென்று ஊர் எல்லையை சுற்றி வந்து ஆலயத்தை அடைந்தனர். பக்தி பரவசத்துடன் தூக்கி பவனி வருகின்றனர். தேரை தலையில் தூக்கி செல்வதால் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறுவதாகவும், எல்லை பகுதியான வயல்வெளிகளிலும் தூக்கி செல்வதன் மூலம் விவசாயம் செழிப்பதாகவும் கிராம மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்

Tags:    

Similar News