கால்நடை மருத்துவமனைகளில் தேவையான மருத்துவர்களை நியமிக்க கோரிக்கை
கால்நடைகளின் இழப்புகளை தடுக்க கால்நடை மருத்துவமனைகளில் தேவையான மருத்துவர்களை நியமிக்க பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை;
திருவாரூர் மாவட்ட பகுதியில் கால்நடை மருத்துவர்கள் 74 பேர் இருக்க வேண்டிய நிலையில்.. தற்பொழுது மாவட்டம் முழுவதுமே 14 கால்நடை மருத்துவர்கள் மட்டுமே உள்ளதால் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம், குடவாசல், வலங்கைமான் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் பெரும்பாலும் மருத்துவர்கள் வாரத்திற்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே வருகின்றனர்.பல இடங்களில் கால்நடை மருத்துவமனைக்கு மருத்துவர்கள் நியமிக்கப் படாமல் உள்ளதால் கால்நடை மருத்துவமனை மூடப்பட்டு ளளது.
இதன் காரணமாக கடந்த மாதங்களில் பல கால்நடைகள் கோமாரி நோய் தாக்கப்பட்டு இறந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மார்ச், ஏப்ரல் மாதங்களிலேயே கோமாரி தடுப்பூசி போடப்பட்டு வந்துள்ளதால். பத்து வருடங்களாக கோமாரி நோய் பரவாமல் கட்டுப்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ராமமூர்த்தி என்ற விவசாயி கூறியதாவது: கால்நடையை காக்க வேண்டிய மருத்துவர்கள் கால்நடை மருத்துவமனைகளில் இல்லை. கடந்த காலங்களில் கோமாரி நோயினால் கால்நடைகள் இறந்தமைக்கு அரசாங்கம் அதை ஒரு இழப்பாகவே கருதவில்லை. கால்நடைகளை காப்பாற்ற அரசு முன்வரவில்லை என்பது வருந்தத்தக்க விஷயமாக உள்ளது. கால்நடை விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் மருத்துவமனைகளில் மருத்துவர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்..