நன்னிலம் பகுதியில் முன்னறிவிப்பில்லா மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

நன்னிலம் பகுதியில் முன்னறிவிப்பு இல்லாமல் ஏற்படும் மின்வெட்டால் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

Update: 2022-04-22 13:52 GMT

பைல் படம்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் இரண்டு நாட்களாக அறிவிப்பு இல்லாமல் மின்வெட்டு உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். நேற்று இரவு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்த நிலையில் இன்று மாலையில் இரண்டு மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை மின்சாரம் இல்லாமல் உள்ளது.

கிராம பகுதிகளில் தொடர்ந்து பகல் நேரத்திலும் இரவு நேரத்திலும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுத் தேர்வுக்கு படிக்க கூடிய மாணவர்கள் இரவு நேரங்களில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள்.

இரவில் தொடர்ந்து ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் கொசுக்கடியால் அவதிப்படுகிறார்கள். மின்வெட்டு குறித்து புகார் தெரிவிப்பதற்காக பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவர்கள் அழைப்பை ஏற்க மறுக்கின்றனர்.

தற்போது கோடைகாலம் என்பதால் கர்ப்பிணிகள் சிறுகுழந்தைகளை வைத்துள்ள தாய்மார்கள், முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் மின்வெட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின்வெட்டு புழுக்கம் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளது ஒருபுறம் என்றால், கொசுக்கடியால் பொதுமக்கள் மறுவகையில் தூங்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் தேர்வு நெருங்கும் நேரத்தில் படிப்பதற்கு மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும் செல்போன் லைட் வெளிச்சத்திலும் படிக்கும் நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து செல்.சரவணன் என்பவர் சொல்லும்போது, அறிவிப்பு இல்லாமல் மின்சாரத்தை நிறுத்துவது சிரமமாக உள்ளது என்றும், பள்ளி மாணவர்கள் படிப்பதற்கு சிரமபடுவதாகவும், நேரம் குறிப்பிட்டு மின்வெட்டு இருந்தால் தயாராக மக்கள் இருப்பார்கள் எனவும் கூறினார்.

இரண்டு நாட்களுக்கு முன் மின்சாரத்துறை அமைச்சர் மின் மிகை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என குறிப்பிட்டு இருந்த நிலையில் தற்போது தமிழ்நாடு முழுதும் மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News