வலங்கைமான் பகுதியில் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

வலங்கைமான் பகுதியில் தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்

Update: 2021-04-30 05:45 GMT

வலங்கைமான் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு செய்தபோது எடுத்த படம்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் நவம்பர் மாத இறுதியில் படிப்படியாக குறைந்த வைரஸ் பரவல் தற்போது இரண்டாவது அலையாக உருவெடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதிவேகமாக பரவி வருகிறது.

இதை அடுத்து வலங்கைமான் பகுதிகளில் தொற்று பரவாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை பணிகளை வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். வலங்கைமான் தாசில்தார் பரஞ்சோதி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் பகுதியில் இயங்கிவரும் பிரியாணி கடைகள் உள்ளிட்ட கடைகளை ஆய்வு கொண்டனர்.

மேலும் வணிக வளாகங்கள் சில்லறை விற்பனை கடைகளில்  முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியுடன் விற்பனை செய்வது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு வழிகாட்டுதல்களை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

அருகிலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு செய்தபோது, அலுவலகத்தில் முகக் கவசம் அணியாமல் பணி செய்து கொண்டிருந்த அலுவலர்கள் இருவருக்கு தலா 200 வீதம் அபராதம் விதித்தனர். அரசுத்துறை அலுவலர்கள் முககவசம் அணியாமல் பணியாற்றுவதை கண்டித்ததோடு, தமிழக அரசு நடத்தை விதிமுறைகளை உணர்ந்து,  வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க முன்மாதிரியாக பணியாற்ற முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News