நன்னிலம் பஸ் நிலையத்தில் பூட்டிக்கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறை
நன்னிலம் பேருந்து நிலையத்தில் பூட்டப்பட்டுள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.;
பாலூட்டும் தாய்மார்கள் பணி மற்றும் பயணம் நிமித்தமாக வெளியே செல்லும் போது, பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் வேளைகளில் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வித இடையூறுமின்றி தனிமையில் வசதியாக பாலூட்டும் வகையில் அ.தி.மு.க. ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள் அமைக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக 03.08.2015 அன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேருந்து நிலையத்தில் திறந்து வைக்கப்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறை தற்பொழுது பூட்டப்பட்டுள்ளது. இதனை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.