மனநிலை பாதிக்கப்பட்ட நபர் இரயிலில் அடிபட்டு மரணம்

Update: 2021-04-25 15:45 GMT
மனநிலை பாதிக்கப்பட்ட நபர் இரயிலில் அடிபட்டு மரணம்
  • whatsapp icon

நாகை மாவட்டம் ராராந்திமங்களம் நடுத்தெருவைச் சேர்ந்த பக்கிரிசாமி என்பவரது மகன் பிரபாகரன் வயது 35. இவர் மனநிலைப் பாதிக்கப்பட்டவர் எனத்தெரிகிறது. இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை, நன்னிலம் அருகில் உள்ள விசலூர் பகுதியில், மயிலாடுதுறை திருவாருர் இருப்புப்பாதையை கடக்க முயன்றபோது, மும்பையிலிருந்து காரைக்கால் நோக்கிச் சென்ற விரைவு ரயிலில் சிக்கி உயிரிழந்தார். தகவலறிந்த திருவாரூர் ரயில்வே பாதுகாப்புக் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News