கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம்
கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.;
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே கூத்தனூரில் உலக பிரசித்தி பெற்ற மகாசரஸ்வதி ஆலயம் அமைந்துள்ளது.இந்தியாவிலேயே சரஸ்வதிக்கு என்று தனிக் கோயில் அமைந்துள்ளது கூத்தனூரில் மட்டும் தான்.
ஒட்டக் கூத்தன் எனும் தமிழ் கவிஞனுக்கு சரஸ்வதிதேவியின் அருள் கிடைக்கப் பெற்று, ஒட்டக்கூத்தன் வழிபட்டதால் கூத்தனூர் என பெயர் பெற்றது.
குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னதாக இக்கோயிலுக்கு அழைத்து வந்து நெல்லில் எழுத்தை எழுத வைப்பது வழக்கமாக உள்ளது. இதற்கு 'அக்ச்சாசரம்' எனப் பெயர். சரஸ்வதி கோவிலில் வித்தியாரம்பம் செய்து பின் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது உண்டு. இன்று நவராத்திரியின் பத்தாவது நாளான விஜயதசமியன்று பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்து கோவிலில் வித்யாரம்பம் செய்தனர்.
நேற்று தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் ஆலய தரிசனம் செய்யலாம் என்று அறிவித்ததையொட்டி வெளியூர்களிருந்து வெளி மாவட்டத்தில் இருந்தும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து வித்தியாரம்பம் செய்தனர்.