அரசு ஊழியர் சங்க அமைப்பு தினம்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 38வது அமைப்பு தினம் நன்னிலத்தில் கொண்டாடப்பட்டது.;

Update: 2021-05-06 17:00 GMT

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 38வது அமைப்பு தினம், சங்கத்தின் சார்பாக நன்னிலத்தில் கொண்டாடப்பட்டது. நன்னிலம் வட்டக் கிளைத் தலைவர் கருணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர் வி.சி.குமார் சங்கக் கொடியேற்றிச் சிறப்புரையாற்றினார். புதிதாகப் பொறுப்பேற்கும் தமிழக அமைச்சரவைக்கு வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அளித்துள்ள வாக்குறுதியின்படி, தமிழக அரசு ஊழியர் சங்கத்தின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றிட வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

சங்கத்தை உருவாக்கிக் கட்டமைக்கப் பாடுபட்ட நிர்வாகிகளின் தியாகங்களைப் போற்றி, அவர்கள் வழியில் சங்கத்தினை திறம்பட வழிநடத்தி, அரசு ஊழியர்களின் நலன்களைப் பாதுகாத்திட உறுதி மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் வட்டச் செயலாளர் வினோத்ராஜ், பொருளாளர் சசிகலா, சாலைப் பணியாளர் சங்கப் பொறுப்பாளர் சிவாஜி உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்

Tags:    

Similar News