நன்னிலம் பகுதியில் திமுக கபசுர குடிநீர் வழங்கல்
நன்னிலம் பகுதியில் ஒன்றிய திமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.;
நன்னிலம் ஒன்றியத்துக்குட்பட்ட வடகுடி மற்றும் சிறுபுலியூர் போன்ற பல்வேறு பகுதிகளில், திமுக சார்பாகப் பொதுமக்களுக்குக் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.வடகுடிப் பகுதியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய நிர்வாகிகள் கோபிநாத், லோகநாதன், வினோத்குமார் ஆகியோர் தலைமையிலும்,
சிறுபுலியூர் பகுதியில் ஊராட்சி மன்றத் தலைவர் ராமபாஸ்கர், திமுக கிளை நிர்வாகிகள் காசிபாஸ்கர் மற்றும் வைத்தி ஆகியோர் தலைமையிலும் பொதுமக்களுக்குக் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. ஊராட்சிப் பகுதிகளில் பொதுமக்களின் வீடுகளுக்கே நேரடியாகத் தேடிச்சென்று முன்னுறுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்குக் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.