திருவாரூரில் ஒரோ கிராமத்தில் 12ம் தேதி 47, இன்று 49 பேரூக்கும் தொற்று
திருவாரூர் மாவட்டம் நாலாங்கட்டளை கிராமத்தில் 12ம் தேதி 47 பேருக்கும், இன்று 49 பேருக்கும் புதிதாக தொற்று கண்டறியப்ப்டது. இனதால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா தொற்றின் இரண்டாம் நிலை மிக வேகமாக பரவி உயிர்ச்சேதம் ஏற்பட்டு வருகிறது.. இந்த நிலையில்.. திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், எரவாஞ்சேரி அடுத்த நாலாங்கட்டளை கிராமத்தில் கடந்த 12-ஆம் தேதி, 120 பேர்களுக்கு கொரானா பரிசோதனை செய்தனர்..
அதில் 47 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து. இன்றும் 240 பேருக்கு பரிசோதனை செய்ததில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..
அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நோயாளிகளை நன்னிலம் அரசு மருத்துவமனை மற்றும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நன்னிலம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரொனா உள் நோயாளிகள் பகுதியிலிருந்து கொரோனா நோயாளிகள் வெளியே வந்து அமர்ந்துள்ளனர்..கொரோனா வைரஸ் காற்றிலே பரவும் தன்மை கொண்டது என்ற நிலையில் நன்னிலம் அரசு மருத்துவமனையிலிருந்து கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது..
நன்னிலம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில்..உடனே மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.