மன்னார்குடியில் முத்தமிழ் கலைஞர்களுக்கு நலதிட்ட உதவிகள்

மன்னார்குடியில் தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் இயல், இசை, நாடக கலைஞர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கபட்டது.;

Update: 2021-07-24 10:45 GMT

விவசாய சங்கத்தின் சார்பில் இயல், இசை, நாடக கலைஞர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு சார்பில் கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து நலிவடைந்த இயல் இசை, நாடக கலைஞர்கள் வேலையிழந்து அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டடுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் 150 க்கு மேற்ப்பட்ட இயல் இசை நாடக கலைஞர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் அடங்கிய நல திட்ட உதவிகளை விவசங்கத்தினர் வழங்கினார்கள்.

Tags:    

Similar News