மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மெய்யநாதன் கொரோனா சிகிச்சைக்குறித்து ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2021-05-25 12:15 GMT

திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இன்று அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா நோய் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் அமைச்சர் மெய்யநாதன் கேட்டறிந்தார்.

மேலும் அடிப்படை தேவைகள் மற்றும் கூடுதலாக படுக்கைகள் தேவைப்படும் பட்சத்தில் அத்தகைய படுக்கைகளுடன் கூடிய பிரிவுகள் அமைப்பதற்கு தேவையான கட்டிட வசதிகளை தேர்வு செய்து வைத்துகொள்ளுமாறு அலுவலர்களிடம அமைச்சர் அறிவுறுத்தினார்

அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கின்ற வகையில் முதலமைச்சர் தொடர் நடவடிக்கைகளாக மக்களின் இருப்பிடத்திற்கே சென்று பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கொரோனா தொற்றுள்ள பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கபட்டு அப்பகுதியிலுள்ள மக்களுக்கு காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தன்னார்வலர்கள் மூலம் கொண்டு சேர்த்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர்.சாந்தா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி, எம்எல்ஏக்கள் திருவாரூர்.பூண்டி.கே.கலைவாணன், மன்னார்குடி .டி.ஆர்.பி.ராஜா, மாவட்ட ஊராட்சித்தலைவர்.பாலசுப்ரமணியன்,

சுகாதாரத்துறை இணை இயக்குநர்(பொறுப்பு) .உமா, சுகாதாரத்துறை துணை இயக்குநர் மரு.கீதா, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் .அழகர்சாமி, உதவி இயக்குநர் ஊராட்சிகள்.பழனிசாமி, நகராட்சி ஆணையர் .மல்லிகா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News