பங்குனி திருவிழா: கண்டபேரண்ட பஷி வாகனத்தில் ராஜகோபாலசாமி தரிசனம்
மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோயில் பங்குனி திருவிழாவில், கண்டபேரண்ட பஷி வாகனத்தில் ராஜகோபால ஸ்வாமி, ராஜ அலங்காரத்துடன் அருள் பாலித்தார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபலசுவாமி கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி ஆண்டுதோறும் 30 நாட்கள் பங்குனி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா 21-ந் தேதி தொடங்கியது
இதன் ஒரு பகுதியாக ஆறாம் நாள் திருவிழாவான இன்று யானை வாகன மண்டபத்தில் ராஜகோபால சுவாமி ராஜ அலங்காரத்தில் புறப்பட்டு கண்டபேரண்ட பஷிவாகனத்தில் நாதஸ்வர இன்னிசை கச்சேரி முழங்க கோபால சமுத்திரம் முக்கிய வீதிகளின் வழியாக புறப்பாடு கண்டருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.