ரேஷன் கடைகளில் பனைவெல்லம் விற்பனை துவக்கம்: இயற்கை ஆர்வலர்கள் பாராட்டு

ரேஷன் கடைகளில் பனைவெல்லம் விற்பனை துவங்கப்பட்டுளது வரவேற்கத்தக்கது - கிரீன் நீடா அமைப்பு.

Update: 2021-10-26 10:48 GMT

கிரீன் நீடா அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு.

தமிழக சட்டசபையில் வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ரேஷன் கடைகளில் பனைவெல்லம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் ரேஷன் கடைகளில் 100 கிராம், 250 கிராம் ,500 கிராம், ஒரு கிலோ என விற்பனை செய்யப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் வாங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் ரேஷன் கடைகளில் முதல் முறையாக கற்பகம் என்ற பெயரில் பனைவெல்லம் விற்பனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ரேஷன் கடைகளில் பனைவெல்லம் விற்பனையைத் துவக்கியதன் மூலம் தமிழகத்தில் இனி பனைத்தொழில் பன்மடங்கு பெருகும் என்றும், இயற்கையோடு இணைந்து மனித வாழ்வின் மேம்பாட்டில் நோக்கிச் செல்லும் வகையில் இந்தத் திட்டம் துவங்கப்பட்டது என இயற்கை ஆர்வலர்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கிரீன் நீடா அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு தெரிவித்ததாவது;- தமிழக முதல்வராக மு .க .ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் பல மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றப்பட்டு வருவது பாராட்டுக்குரியது. பனை வெல்லத்தில் பொட்டாசியம் ஏராளமான அளவில் உள்ளது ரேஷன் கடைகளில் பனைவெல்லம் விற்பனை செய்யும் திட்டம் வரலாற்றில் தனி முத்திரை பதிக்கும் திட்டமாக ஜொலிக்கும். எனவே இந்த பனைவெல்லம் விற்பனை திட்டத்தால் பனைத்தொழில் பன்மடங்காக பெருகிட பொதுமக்கள் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் பனைவெல்லத்தை வாங்கி இத்திட்டம் வெற்றி அடைய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News