மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

மன்னார்குடியில் ஸ்ரீராஜகோபாலசுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர பெருவிழா 30 நாள் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது

Update: 2022-03-21 11:22 GMT

மன்னார்குடியில் ஸ்ரீராஜகோபாலசுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர பெருவிழா 30 நாள் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது

குலோத்துங்க சோழனின் விண்ணகரம் என போற்றப்படுவதும், வைணவ ஆலயங்களில் தொன்மை சிறப்பு வாய்ந்ததுமான திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபாலசுவாமி திருக்கோயில் பங்குனிப் பெருவிழா மற்றும் விடையாற்றி 30 தினங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழாவின் துவக்கமான இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது.

பெருமாள் சன்னதியின் முன்பு அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கருடன் சின்னம் வரையப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜை செய்து தீட்சதர்கள் கொடி ஏற்றினார்கள். விசேஷ தீபாராதனைகள் நடத்தப்பட்டது. கொடிமரத்திற்கு முன்பு ஸ்ரீஇராஜகோபாலசுவாமி பட்டு வஸ்திரம் அணிந்து கல்யாண அவசர திருக்கோலத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் இந்த கொடியேற்றத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று இரவு முதல் ஒவ்வொரு தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைஉள்ளது.

வருகின்ற ஏப்ரல் 1 -ம் தேதி கருடசேவையும், உலகபுகழ்பெற்ற வெண்ணைத்தாழி திருவிழா ஏப்ரல் 5-ம் தேதியும் நடைபெற உள்ளது. ஏப்ரல் 6-ம் தேதியன்று தேரோட்டம் நிறைவடைந்து அதன்பின்னர் விடையாற்றி விழா துவங்குகிறது. தினமும் இரவு சுவாமி புறப்பாட்டின் போது பிரம்மாண்டமான வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும் . இதில் மாநிலம் முழுவதும் பக்தர்கள் பங்கேற்பார்கள்

Tags:    

Similar News