மன்னார்குடி காளியம்மன் கோவில் மாசி திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் பால்குடம், காவடி திருவிழா. திரளான பக்தர்கள் பங்கேற்பு.;

Update: 2022-02-21 13:00 GMT
மன்னார்குடி காளியம்மன் கோவில் மாசி திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

மன்னார்குடியில் வானக்காரத்தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவிலில் மாசிமாத திருவிழாயாெட்டி பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

  • whatsapp icon

திருவாருர் மாவட்டம் மன்னார்குடியில் வானக்காரத்தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசிமாத திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பால்குட ஊர்வலம் இன்று நடைபெற்றது.

இதையடுத்து விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று கோவிலை வந்தடைந்தனர். அதைதொடர்ந்து காளியம்மனுக்கு மஞ்சள், சந்தனம், களபம், விபூதி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் பக்தர்கள் எடுத்து வந்த பால்குடம் மூலம் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர் . பின்னர் பல்வேறு மலர்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News