மன்னார்குடியில் ஊரடங்கில் சுற்றி திரிந்த வாகனங்கள் பறிதல்

மன்னார்குடியில் ஊரடங்கில் தேவையின்றி சுற்றி திரிந்த வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர் .

Update: 2021-05-24 03:00 GMT

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முழுஊரடங்கில் வாகனங்களில் சுற்றித் திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தமிழகம் முழுமையும் தளர்வற்ற முழு ஊரடங்ககை தமிழக அரசு இன்று முதல் அறிவித்துள்ளது .அத்தியவசிய தேவைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்ல வாகனங்கள் செல்லவும் , அனுமதி பெற்று பொதுமக்கள் வெளியில் செல்ல இ-பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தேவையின்றி பொதுமக்கள் , வாகனங்கள் அலைந்து திரிகின்றனர். இவர்களை கட்டுபடுத்த காவல்துறையினர் பெரும் முயற்ச்சி எடுத்துவருகின்றனர்

இன்று முழு ஊரடங்கு அறிவித்தும் வாகனங்கள் , பொதுமக்கள் வெளியில் சென்றனர் அவர்களை தீவிர விசாரணை செய்து .-பாஸ் , மருத்துவ தேகைளுக்கு செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதியளித்து கொரானவை கட்டுபடுத்த வாகனங்களில் தேவையின்றி சுற்றியவர்கள் மீதும், அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்து, வழக்கு பதிவு செய்து வருகின்றனர்..

Tags:    

Similar News